12
Apr
இயக்குனர் - எஸ் சசிகாந்த் நடிகர்கள் - மாதவன் , நயன்தாரா , சித்தார்த் , மீரா ஜாஸ்மின் இசை - சக்தி ஶ்ரீ கோபாலன் தயாரிப்பு - சக்கரவர்த்தி ராமசந்திரன் & சசிகாந்த் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக மாறிய படம். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என நடிப்பில் திறமையானவர்கள் ஒன்றிணைந்திருக்கும் படம். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கொண்டாடப்பட்ட ஒருவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. அதனால் அவர் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறது. ஆனால், தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே ஓய்வு குறித்து அறிவிக்க நினைக்கிறார். இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும்…