இமான் மற்றும் சுசீந்திரன் இணைந்து தொடங்கிய “2K லவ்ஸ்டோரி ” பட பூஜை!

இமான் மற்றும் சுசீந்திரன் இணைந்து தொடங்கிய “2K லவ்ஸ்டோரி ” பட பூஜை!

City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர்…
Read More

“வள்ளி மயில்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்  இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா,  சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும்  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது.., குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’.  இந்த திரைப்படம் திரைத்துறையில்  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது.., இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு…
Read More
வீரபாண்டியபுரம் – ஜெய் ஜெயித்தாரா ?

வீரபாண்டியபுரம் – ஜெய் ஜெயித்தாரா ?

  இயக்கம்- சுசீந்திரன் நடிகர்கள் - ஜெய், மீனாக்‌ஷி, பாலசரவணன் சுசீந்திரன் ஆரம்ப அறிமுக காலகட்டங்களில் அனைவரையும் யாரிவர் என திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமா பார்க்காத கதைகளை அச்சு அசலாக பேசுவதாக பாரட்டப்பட்டவர், ஆனால் அப்படிபட்டவர் சமீப காலங்களில் அய்யோ அவரா ? என கவலைப்பட வைக்கிறார். அவரது சமீப கால படங்கள் சோபிக்காத நிலையில், ஜெயிக்க நினைத்து ஒரு பழிவாங்கல் கதையை கமர்ஷியல் மசாலா தூவி எடுத்திருக்கிறார். ஒரு கிராமம் அருகே இரண்டு குழுக்கள் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க காத்திருக்கிறார்கள். அந்த கூட்டத்திற்குள் ஒரு குழுவின் மாப்பிள்ளையாக உள்ளே நுழைகிறார் ஜெய், அவர் என்ன செய்கிறார் என்பது தான் திரைக்கதை. படு மோசமான 80 கால திரைக்கதை, அதை விட மோசமான இயக்கம் திடீர் திடீரென வரும் பாட்டு என படம் நம் பொறுமையை சோதிக்கிறது. ஜெய் இதில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் மோசமில்லை. அவர் இன்னும்…
Read More
சுசீந்திரன்  இயக்கும் “சாம்பியன் “ ஷூட் ஆரம்பிச்சாச்சு!

சுசீந்திரன் இயக்கும் “சாம்பியன் “ ஷூட் ஆரம்பிச்சாச்சு!

“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார். இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன் , R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.
Read More