07
Jul
இயக்கம் - அனல் அரசு நடிகர்கள் - சூர்யா சேதுபதி , வரலக்ஷ்மி , தேவயானி , விக்னேஷ் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - ஏ கே பிரேவ் மேன் பிக்சர்ஸ் கே ராஜலக்ஷ்மி அனல் அரசு தமிழின் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம், அவர் வயதுக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அண்ணனை கொலை செய்த எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முன்னிலையில் ஒருவன் கொலை செய்கிறார். அவரை கைது செய்யும் போலீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் (அரசு கூர்நோக்கு இல்லம்) அடைக்கிறது. கணவரை கொலை செய்த அந்த சிறுவனை கொலை செய்ய துடிக்கும் எம்.எல்.ஏ-வின் மனைவி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட, அவரது திட்டத்தை தெரிந்து கொண்டு அதை தைரியமாக சமாளிக்கிறார். சிறுவன் என்று சாதாரணமாக நினைத்த அவனின் அதிரடியை பார்த்து மிரண்டு…
