10
Sep
*சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்* சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். DSPயின் பின்னணி இசையும் விஷுவலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட…