சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பேய் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பேய் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிகழ்வில் நடிகை சுரபி பேசியதாவது. "இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் பேய் காமெடி படத்தில் இப்போது தான் முதல் முறையாக நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி." இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசியதாவது. "இன்று உங்கள் முன்னால்…
Read More