வசந்த் ரவியின் ஏழாவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

வசந்த் ரவியின் ஏழாவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள #VR07 திரைப்படம் சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 05, 2023 அன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. #VR07 அனைவராலும் விரும்பப்படும் ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வரவிருக்கிறது என்பதையும், படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் மற்றும் இதர அப்டேட்கள் இன்னும் சில நாட்களில் தயாரிப்புக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
Read More
அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் செல்வராகவன் மற்றும் யோகி பாபு! தெலுங்கு நடிகர் சுனிலும் இணைந்துள்ளார்!

அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் செல்வராகவன் மற்றும் யோகி பாபு! தெலுங்கு நடிகர் சுனிலும் இணைந்துள்ளார்!

  சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.…
Read More