27
Dec
இயக்கம்: ஷ்யாம்-பிரவீன் நடிகர்கள்: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் இசை: கவாஸ்கர் அவினாஷ் தயாரிப்பு: சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தமிழின் முன்னனி நடிகராக வலம் வரும் சரத்குமார் மீண்டும் நாயகன் வேடமேற்று நடித்திருக்கும் படம், அதுவும் இது அவரது 150 வது படம். மெமரீஸ், க் படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் கூட்டணி மிஈண்டும் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் படம் இது சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அவரது உயரததிகாரி அந்த கொலையாளியை கொலை செய்து விட்டு காணாமல் போகிறார். சில வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தொடர் கொலைகள் அதே பாணியில் நடைபெற ஆரம்பிக்கிறது. கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு…