11
Jan
Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெரும் பொருட்செலவில், அனைத்து வயதினரும்…
