20
Dec
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது திரைப்பயணத்தில் 25 வது திரைப்படம் எனும் மைல்கல்லை “சிறை” படம் மூலம் தொட்டிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர் *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது “சிறை” திரைப்படம். டாணாக்காரன் இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனது 25 வது திரைப்பட எட்டியுள்ள நிலையில், தனது திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் பிரபு பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். தனது திரைப்பயணம் குறித்தும், “சிறை” படம் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து…
