’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

  எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், "தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்" என்றார். நடிகர் மாதவன், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக…
Read More
‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது! நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் 'டெஸ்ட்'. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த 'YNOT' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது…
Read More
இந்தியன் 2 ஒரு பார்வை !!

இந்தியன் 2 ஒரு பார்வை !!

  இந்தியன் படத்தின் மிகப்பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது ? இந்தியன் படத்தை மிஞ்சுவது என்பது இயலாத காரியம் அதனால் இயக்குநர் அதை மறந்து வேறு அனுபவம் தர முயன்றிருக்கிறார்.என்னிடம் இன்னும் சரக்கு தீரவில்லை என ஷங்கர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். இந்தப்படம் இரண்டு விதமான விமர்சனங்களைக் குவிக்கும் ஒன்று சூப்பர் இன்னொன்று படு மொக்கை. இந்த இரண்டிற்கும் காரணம் படத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் டைரக்டராக திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர். அதுக்கு முக்கிய காரணம் இந்தியன் படம் தான் அதன் இரண்டாம் பாகம் எனும்போது, அதில் எத்தனை விமர்சனங்கள் வருமென்று தெரிந்தே தான் முயற்சித்திருக்கிறார். அவர் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கிறது ஆனால் அதைத்தாண்டி அவர் ஒரு அசத்தலான கமர்ஷியல் டைரக்டர். கிட்டதட்ட மாடர்ன் மெகா கமர்ஷியல் படங்களின் ப்ளூ பிரிண்ட் அவர் உருவாக்கியது தான், சமீபத்து…
Read More