பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், "'ப்ளட் மணி' படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை…
Read More