“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று டிரெய்லரை வெளியிட்டனர். பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது.. ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால்…
Read More