29
Sep
ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர், நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது… இந்த சீரன் திரைப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சினிமாவுக்காக சில விசயங்கள் செய்துள்ளோம். சமூகத்திற்கு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லியுள்ளோம். என்னுடன்…