கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு “சார்”- சீமான் புகழாரம் !!

கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு “சார்”- சீமான் புகழாரம் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது.. என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் “சார்”.  SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும்…
Read More
நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

  Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … இயக்குநர் ஹெச். வினோத் பேசியதாவது... நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் "உடன்பிறப்பே" மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு,…
Read More
சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இயக்குநர்-அரசியல் பிரமுகமான சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி…
Read More