Home Tags Satya

Satya

ஆறு வருடங்களில் 15 படங்கள் மட்டுமே இசை அமைச்சது ஏன்? – சத்யா பதில்!

எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசைபயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலைபொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல்இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்துவேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர்தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டேஇருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம்சம்பாதிக்க வேண்டியதுதானே?  என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா. நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துலகமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தரமுடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன். ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின்படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு  கூறுகிறார் சத்யா. தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவேஇருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்காபடத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்றுநம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா. இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்குதயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன். "பயமா இருக்கு" படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Must Read

அண்ணன் நாயகனாவது மகிழ்ச்சி – ரியா ஷிபு !!

  HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி...

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்... மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பீர்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞான வித்தகன்.....

“கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

SSE & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட...