05
Feb
'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு வழங்குகிறார். எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும்…