‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்ட இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் மற்றும் பிரத்யேக…
Read More
ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படம் ஸ்டார்ட்!!

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படம் ஸ்டார்ட்!!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக,  புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார். தமிழ்…
Read More