02
Oct
'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை. என்னுடைய பெயரை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்திவர்கள் மீதே புகார் அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். ஆர் .ஜே. மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இங்கிலிஷ் படம். புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த 'இங்கிலிஷ் படம்' இயக்குநர் மீது ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது, அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், அது குறித்து தனது விளக்கத்தைக் கடிதமாக வெளியிட்டுள்ளார். "இங்கிலிஷ் படம்…