பல வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் வில்லனாக நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

பல வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் வில்லனாக நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி என்னிடம் கதையை சொல்வதற்கு முன்பாகவே இந்த படத்தில் நான் ஹீரோ..…
Read More
இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லர் !

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லர் !

  இந்திய திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களை தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் நாயகி நைனா கங்குலி பேசியதாவது… ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில்…
Read More