இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

  லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.…
Read More
ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது!

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது!

  ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய 'ருத்ரன்' திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டைரி'யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி…
Read More
தீபாவளிக்கு வெளியாகிறது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு முடிவடைந்த கையொடு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தீபாவளிக்கு வெளியாகிறது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு முடிவடைந்த கையொடு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

  கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் அப்படியொரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், "படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப்பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரைக்கு கொண்டு வர…
Read More