ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் ! நடிகர் ராதாரவி புகழாரம்!

ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் ! நடிகர் ராதாரவி புகழாரம்!

  நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். செங்களம் வெப் தொடர் குழுவினருக்கு ராதாரவி விருது வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது, இங்கே கூடி இருக்கும்  என் குடும்பத்தை சார்ந்தவர்களே, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான்…
Read More
நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

  ``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…
Read More
அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; மாவீரன் பிள்ளை படம் பற்றி ராதாரவி பேச்சு தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம் பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற…
Read More
கொடை பட இசை வெளியீட்டு விழா !!

கொடை பட இசை வெளியீட்டு விழா !!

  எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது. இவ்விழாவினில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது.., இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும்…
Read More
விக்ரம் படத்துடன் வரும் மாயோன் டிரெய்லர் !

விக்ரம் படத்துடன் வரும் மாயோன் டிரெய்லர் !

"கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு. 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.…
Read More
“பர்ஸ்ட் நைட் காட்சியையும் லைவா எடுப்பியா..?” ; புளூ சட்டை மாறனிடம்  ராதாரவி கேள்வி

“பர்ஸ்ட் நைட் காட்சியையும் லைவா எடுப்பியா..?” ; புளூ சட்டை மாறனிடம் ராதாரவி கேள்வி

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்., இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்.. நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்..…
Read More
மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

  ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,'' ‘ருத்ரதாண்டவம்’ யார் மனதையும் காயப்படுத்தாத, அனைவருக்குமான படம்.…
Read More