‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்!!

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான…
Read More
‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது !

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது !

  உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியன் திட்டமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ஒரு முக்கியமான மற்றும் நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் நடந்த முதல் படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்தவர், தற்போது இரண்டாவது ஷெட்யூலிலும் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ள படங்களில் ராம், சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் CEO விசு ரெட்டி ஆகியோரின் மகிழ்ச்சியான முகங்களைக் காணலாம். ராம் மற்றும் பூரி ஜெகன்நாத் இருவரும் முன்பு பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தைக் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக 'டபுள் ஐஸ்மார்ட்' படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. பூரி…
Read More