16
Mar
இயக்குநர் - இளங்கோ ராம் , நடிகர்கள் - வைபவ் , சுனில், நிஹாரிகா, சாந்தினி ,பாலா சரவணன், முணிஷ்காந்த், VTV கணேஷ் இசை - அருண் ராஜ் தயாரிப்பு - ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், கார்த்திகேயன் தமிழில் அடல்ட் காமெடி, சிலாப்ஸ்டிக் காமெடி படங்கள் வருவதேயில்லை அந்தக்குறையைப் போக்கும் வகையில் வந்துள்ளது இந்த பெருசு படம். இலங்கையில உருவாகி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இப்படம், தமிழில் ரீமேக்காகியுள்ளது. ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு ஒருத்தர் திடீரென இறந்து விடுகிறார். மகன்கள் ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது டிவி பார்க்கும் பெருசு இறந்து கிடக்கிறார். ஆனால் அவரது மர்ம உறுப்பு ஸ்டாராங்காக நிற்கிறது, அந்த உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி…
