05
Jun
கிராமத்து பின்னணியில் விளையாட்டு, குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை மையமாக வைத்து இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள படம் பெத்தி . ராம் சரண் தனது திரைப்பயணத்தில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். பெட்டி கதாபாத்திரத்தில் ராம் சரண் முழுமையாக ஒன்றிப்போய் நடித்திருக்கிறார். அவரது உடல்மொழி, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் ரசிகர்களை கவர்கின்றன. குறிப்பாக விளையாட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், கிளைமாக்ஸ் பகுதியில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை மேலும் உயர்த்துகின்றன. ஒளிப்பதிவு கிராமத்து சூழலை அழகாக பதிவு செய்துள்ளதுடன், விளையாட்டு போட்டி காட்சிகளும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கான மாஸ் தருணங்களும் படத்தில் குறைவில்லை. ஆனால் படத்தின் திரைக்கதை எல்லா இடங்களிலும் அதே அளவுக்கு வலுவாக இல்லை. விளையாட்டு திரைப்படங்களில் ஏற்கனவே பார்த்த பல காட்சிகள்…
