சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,'' தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு…
Read More
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ -ஆஸ்கர் குழுவினரை கவருமா?

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ -ஆஸ்கர் குழுவினரை கவருமா?

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யா வின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும்.…
Read More