07
Dec
சோசியல் மீடியா நண்பர்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனுமதியுங்கள்.. 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பட தயாரிப்பாளர் கோரிக்கை! அன்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்.. வரும் டிசம்பர் 13 அன்று எனது ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. தற்போது திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை என் போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்காக சற்று பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆம் பல சிறு படங்கள் இது போன்ற சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களினால் மட்டுமே வெளியே தெரிகிறது. எனவே தயாரிப்பாளர்கள் அனுமதியோடு அவர்கள் பரிந்துரைக்கும் யூடியூப் சேனல் மட்டுமாவது விமர்சனங்களை வெளியிட்டால் சரியாக இருக்கும்…
