“காதலிக்க நேரமில்லை”  யூஏ சர்டிபிகேட் படம் – ஜெயம் ரவி !!

“காதலிக்க நேரமில்லை” யூஏ சர்டிபிகேட் படம் – ஜெயம் ரவி !!

  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது.... காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி…
Read More
ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு!

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை". ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை 'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது
Read More