05
Oct
காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' என்ற படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தற்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். மிகச்சிறிய உண்மைச் சம்பவத்தை எடுத்து யதார்த்தமாக படமாக்கப்பட்டது. நாயகன் பஹத் பாசிலை ஒருவன் அடித்துவிடுகிறான். அன்றுவரை யாருடைய பிரச்சனைக்கும் போகாத பஹத் பாசிலுக்கு அது அவமானமாகிவிடுகிறது. செருப்பை போட்டுக் கொள் என்று சொல்லும் போது, அவனை அடிக்காமல் செருப்பு போட மாட்டேன் என்று அப்போதைய வீம்புக்கு கூறிவிடுகிறான். தன்னை அடித்தவனை பஹத் தேடிச் செல்லும் போதுதான் அவன் வேலைக்காக துபாய் சென்றது தெரிய…