02
Dec
இயக்கம் - நிலேஷ் கிருஷ்ணா நடிகர்கள் - நயன் தாரா , சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார் , ஜெய் லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் வந்திருக்கும் படம். திருச்சி ஶ்ரீரங்க நாதருக்கு நெய்வேத்தியம் சமைக்கும் குடும்பத்தில் வளரும் பெண்குழந்தை ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக ஆசைப்படுகிறாள் அவளது ஆசை நிறைவேறியதா என்பதே படம். பிராமணப் பெண் ஒருத்தி நான் வெஜ் சமைக்கும் ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக முடியுமா ? கேட்கும் போதே பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ஒன் லைன் தான் கதை. நம்ம விடுகளிள் எப்போதும் லேடீஸ்தான் சமையல் செய்றாங்க. ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களுல ஏன் ரொம்ப குறைவான அளவுல லேடீஸ் செஃப்பா (சமையல் கலைஞர் )இருக்காங்க" என்று அன்னபூரணி படத்தில் சத்யராஜ் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்த அன்னபூரணி படத்தின் திரைக்கதையை அமைதிருக்கிறார்…
