natural agri
கோலிவுட்
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘ குத்தூசி’
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியுள்ள படம்"குத்தூசி". வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கியகதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார்.
இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால்இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும்படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும்என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.
நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்புவிவசாயம்தான் என உலகநாடுகள் அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும்எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாகிவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார்இயக்குனர் சிவசக்தி.
இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை பகுதி மற்றும் சென்னையில்மொத்தம் 54 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். காதல், ஆக்ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையாக குத்தூசிஉருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
இயக்குனர் - சிவசக்தி
இசை – N.கண்ணன்
ஒளிப்பதிவு - பாஹி
பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை
எடிட்டிங் – J.V மணிகண்ட பாலாஜி
கலை - ஸ்ரீஜெய் கல்யாண்
வசனம் - வீருசரண்
சண்டைகாட்சிகள் - ராஜசேகர்
நடனம் - ராதிகா, சங்கர்
இணை தயாரிப்பாளர் - த.கணேஷ் ராஜா
Must Read
கோலிவுட்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரா.சவரி முத்து இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!
Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான...
கோலிவுட்
ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !
நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’...
சினிமா - இன்று
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி...