23
Jan
ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் லந்துகொண்டு சிறப்பித்தார்கள். விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியது.. "சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மாறியிருக்கிறது அதனால் நல்லது நடக்கும். இந்த முன்னா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுங்கள். அவர்கள் உதவுவார்கள் என்றார். நடிகர் விக்னேஷ் பேசியது.. "வி.சேகர் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும். ஆர்.வி உதயகுமாரின் பெரிய ரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான…
