21
Dec
டிஸ்னி தயாரிப்பில் தி லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக அப்படத்தின் முன் கதையாக வந்துள்ள படம் தான் முஃபாசா தி லயன் கிங். ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசை ஆளலாமா ? என்பது தான் இப்படத்தின் அடிநாதம். தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா ஒரு பெரும் துயரால், அவன் மண்ணை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது. நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி. இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை…