நயன்தாராவின் தெய்வீகத் தோற்றம்… சுந்தர்.சியின் பிரம்மாண்டமான ஃபேண்டஸி முயற்சி!

நயன்தாராவின் தெய்வீகத் தோற்றம்… சுந்தர்.சியின் பிரம்மாண்டமான ஃபேண்டஸி முயற்சி!

நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா மோதும் தெய்வீகப் போராட்டம்! ஊர்வசியின் நடிப்பு, பிரம்மாண்டமான காட்சிகள், அம்மன் சென்டிமென்ட் என தீபாவளிக்கு ஒரு கமர்ஷியல் விருந்து கொடுக்க முயற்சித்திருக்கிறது மூக்குத்தி அம்மன் 2! 2020-ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கடவுள் நம்பிக்கை, போலிச் சாமியார்கள், மதத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள் என நகைச்சுவையோடு சில முக்கியமான விஷயங்களையும் பேசியிருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்பு உருவானது. நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிப்பதும், அவருடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்திருப்பதும் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்தது. ஆனால், முதல் பாகத்தைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்றால், இந்தப் படம் முற்றிலும் வேறொரு கதையையும் உலகத்தையும் நமக்குக் காட்டுகிறது. என்ன கதை? சக்தி என்ற…
Read More
100 கோடி பட்ஜெட்டில்  உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ !!

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ !!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள்…
Read More