7 முறை கதையைத் திருத்தினேன்!’ஹரா’ விழாவில் நடிகர் மோகன்!

7 முறை கதையைத் திருத்தினேன்!’ஹரா’ விழாவில் நடிகர் மோகன்!

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களை வழங்கினார்.கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில்…
Read More
ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன்

ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார் . சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடருவார்கள். இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே…
Read More