ஒரேயொரு படம் – 25 வருஷ சினிமா வாழ்க்கைக்கு அச்சாரம் –  நடிகர் அபிஷேக் நெகிழ்ச்சி!

ஒரேயொரு படம் – 25 வருஷ சினிமா வாழ்க்கைக்கு அச்சாரம் – நடிகர் அபிஷேக் நெகிழ்ச்சி!

'மோகமுள்' என்ற ஒரே ஒரு படம் நடித்தேன். அதன்மூலம் தமிழில் பேசத் தெரியாத எனக்கு இந்த படத்திற்குப் பின் தமிழகத்தில் ஓர் இடமும் இருபத்தைந்து ஆண்டுகால சினிமா வாழ்க்கையும் கிடைத்தது என்று நடிகர் அபிஷேக கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: 'மோகமுள்' திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் 'மோகமுள்' படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக் கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் உருவாக்கி இருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.'மோகமுள்' திரைக் கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நடை பெற்றது. இந்த விழாவில் திரைக்கதை நூலை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த அபிஷேக் வெளியிட்டார்.ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பாரம்பரிய மரபுகள் குறித்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டு நடிகர் அபிஷேக் பேசும்போது, " மோகமுள்' தான் எனக்கு முதல் படம்…
Read More
error: Content is protected !!