மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானி இணையும் புதிய படம் !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானி இணையும் புதிய படம் !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.  அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார்.  நம்பிக்கைக்குரிய வளரும்  இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீகாந்த் ஒடேலா  மிகவும் ஸ்பெஷலான இந்த…
Read More
சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.…
Read More