27
Nov
ஹீரோ யார்? வில்லன் யார்? முகமூடி கழற்றினால் உண்மையில் அவர்கள் யார்?… இந்த கேள்வியையே மையமாக கொண்டு போகும் ஒரு சுவாரஸ்யமான ‘டார்க் ஹெயிஸ்ட்-திரில்லர்’ தான் Mask. கதை – முகமூடியின் பின்னால் இருக்கும் மனிதர்கள் தான் மையம் சொந்தமாக டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர் வேலு (கவின்). வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் முடிந்தவரையில் அவர்களை தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை காப்பாற்றி படிக்க வைத்து ஆளாக்கும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் பூமி (ஆண்ட்ரியா). அதே நேரம் இவருக்கு வேறு ஒரு முகமும் இருக்கிறது. இவர்கள் இருவரின் பாதைகளும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தின் மூலம் குறுக்கிடுகின்றன. கொள்ளை போன பணத்தை எப்படியாவது மீட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இருவரும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? கொள்ளைக்கு காரணம் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு…
