16
Nov
தீபாவளி என்பது தமிழர்கள் வாழ்வில் கொண்டாட்ட திருநாள். புத்தாடை, மத்தாப்பு, இனிப்பு, விருந்து இவையனைத்தையும் தாண்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் புது சினிமா பார்ப்பதென்பது காலந்தோறும் மாறாத பழக்கம். இந்த வருடம் பண்டிகை திருநாளில் குறைந்த படங்களே திரையரங்கில் வெளியாகியுள்ளது. அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேராதரவில் வெற்றி பெற்றுள்ளது “மரிஜீவானா” திரைப்படம். “அட்டு” திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக் நடிப்பில் இயக்குநர் M D ஆனந்த் இந்த “மரிஜீவானா” படத்தை இயக்கியுள்ளார். Third Eye Creations சார்பில் M D விஜய் இப்படத்தினை தயாரித்துள்ளார். நடிகர் ரிஷி இது குறித்து கூறியதாவது... ”இந்த தீபாவளிக்கு என்னுடைய படம் “மரிஜீவானா” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “அட்டு” திரைப்படத்தின் போது ரசிகர்கள் எனக்கு பெரும் வரவேற்பு தந்தார்கள். ஒரு புதுமுக நடிகனாக இல்லாமல் அவர்களில் ஒருவனாக என்னை கொண்டாடினார்கள். “அட்டு” திரைப்படத்தில் முழு ரௌடியாக நடித்திருந்தேன்.…
