30
Jul
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி. ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது… ,…
