மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது அஜித்தின் விடாமுயற்சி!

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது அஜித்தின் விடாமுயற்சி!

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்முலம் அஜித்துக்கு ஜோடியாக 5வது முறையாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு துவங்கவில்லை.   இந்நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
Read More
error: Content is protected !!