27
Aug
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தரமணி' படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை .அவமதிப்பு , கண்டுகொள்ளாமை , வெறுமை ,சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாள மின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது. ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி. படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர் .ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு , ஸ்டெல்லா மேரீஸில் பி.காம் . சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர் .படிப்பில் படு சுட்டி. சுயம் தேடும் சுதந்திரப் பறவை. ஷாப்பிங் போவது தான்…