புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. . ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழுக்கு கிரீடம் சூட்டும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது. இதனை அப்படக்குழுவினர் உறுதி செய்து, பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து, வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து…
Read More