நடிகர் அசோக் செல்வனின் திருமண செய்தி ! இந்த பிரபலத்தின் மகளை தான் கரம் பிடிக்கப்போகிறாராம்!

நடிகர் அசோக் செல்வனின் திருமண செய்தி ! இந்த பிரபலத்தின் மகளை தான் கரம் பிடிக்கப்போகிறாராம்!

இளம் தலைமுறை நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கவினை அடுத்து  நடிகர் அசோக் செல்வனின் திருமணம் குறித்தான செய்தி தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் நடிகர் அசோக் செல்வன் ’நித்தம் ஒரு வானம்’, ‘போர் தொழில்’ என தனது சமீபத்திய படங்களின் தேர்வு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். இவர் நடிகர் அஜித்தின் பில்லா 2 படத்தில் அஜித்தாக நடித்து அறிமுகமானார். இந்நிலையில், இவருடைய திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. விரைவில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் அல்லது அருண் பாண்டியன் தரப்பு வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Read More