2-வயது குழந்தைக்கு முதுகுத்தண்டு சிகிச்சை !!

2-வயது குழந்தைக்கு முதுகுத்தண்டு சிகிச்சை !!

2-வயது குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. வங்காளதேசத்தைச் சேர்ந்த பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த 2-வயது குழந்தைக்கு நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக்கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்பட தொடங்கியது. ஆறு மாத வயதில் குழந்தையின் முதுகுத்தண்டை காசநோய் பாதித்தது. அக்குழந்தை ரேடியல் ரோட்டில் உள்ள  காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வரப்பட்டது. குழந்தையை பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் பிரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குனர் மற்றும் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர், மற்றும் அவரது மருத்துவ குழு, மிகவும் உருக்குலைந்த வளைவு (கைபோசிஸ்) மற்றும் மேல் தொராசிக் பகுதியில் முதுகுத்தண்டின் கிட்டத்தட்டச் சரிவின் காரணமாக அது அழுத்தத்திற்கு உள்ளானது தான் இந்த நிலைக்குக் காரணம்…
Read More