06
Nov
‘கட்சி சேரா’ & ‘ஆச கூட’ புகழ் சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்! இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான 'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இப்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார். 'ரெமோ', 'சுல்தான்' படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை…
