29
Jan
தமிழ் சினிமாவில் பேய் கதைகள் புதிதல்ல. ஆனால் அந்த பேயை ஒரு பைக்குடன் இணைத்தால்? அந்த வித்தியாசமான முயற்சிதான் கருப்பு பல்சர். யஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், முரளி கிரிஷ் எஸ் எழுதி இயக்கியுள்ள இந்த படம், வழக்கமான திகில் பாதையில் செல்லாமல், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அசாதாரண மாற்றங்களை கமர்ஷியலாக பேசுகிறது. 🧩 கதை – ஒரு பொய், ஒரு பைக், பல மர்மங்கள் சென்னையில் சாதாரணமாக வாழும் இளைஞராக அட்டகத்தி தினேஷ். திருமண கனவுகளுடன் மேட்ரிமோனி வழியாக அறிமுகமாகும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ். ஒரு சிறிய பொய் – “என்னிடம் கருப்பு பல்சர் இருக்கிறது” என சொல்லி விடுகிறார் – அந்த பொய்யை உண்மையாக்க வாங்கப்படும் பழைய பைக், பல பிரச்சனைகளை கூட்டி வருவவது தான் படத்தின் மையம். அந்த பைக் தினேஷின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு நடக்கும் விபரீதங்கள்,…
