கருப்பு வித்தியாசமான முயற்சி !!

கருப்பு வித்தியாசமான முயற்சி !!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை செய்து வரும் நடிகர் Suriya, கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தடுமாறி வந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த பல படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ஏமாற்றமளித்த நிலையில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வந்திருக்கிறது “கருப்பு”. இந்த முறை சூர்யா ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறாரா என்ற கேள்விக்கு, பல இடங்களில் “ஆம்” என்று சொல்ல வைக்கும் படமாகவே இது அமைந்திருக்கிறது. படத்தின் தொடக்கம் முழுக்க முழுக்க நீதிமன்ற வளாகத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. நீதிமன்றத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டு, வழக்குகளைக் கூட ஒரு தொழிலாக மாற்றி பணம் சம்பாதிக்கும் வக்கீலாக RJ Balaji நடித்திருக்கிறார். அவர் பேசினால் தீர்ப்பு மாறும், அவர் நினைத்தால் வழக்கு திரும்பும் என்ற அளவுக்கு நீதிமன்றத்தில் அதிகாரம் செலுத்தும் மனிதராக அவர் உருவாக்கப்பட்டிருக்கிறார். சட்டத்தை விட லாபத்தை முன்னிலைப்படுத்தும் அந்த கதாபாத்திரம்,…
Read More