29
Jan
ஆக்ஷன் திரில்லர் படமான 'மகான்' படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'எவன்டா எனக்கு கஸ்டடி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..' என்றும் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்த 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி…