“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப் பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாளை (ஏப்ரல் 9) வெளியாகவுள்ளது 'கர்ணன்'. ஆனால், தமிழகத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1459 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்கு களில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்கு கள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்கள்…
Read More
error: Content is protected !!