நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

  'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் 'கரவாலி' படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய…
Read More